தென் ஆபிரிக்காவிற்கு சர்வதேசம் கொடுத்த அழுத்தங்களே அங்கு ஏற்பட்ட மாற்றங்களுக்கு காரணம் புலம்பெயர் தமிழ்மக்கள் நினைவிற் கொள்ள வேண்டும் என தமிழ் இன உணர்வாளரும் கவிஞருமான தாமரை தெரிவித்துள்ளார்.
இன்று ஸ்ரீலங்கா அரசிற்கு சர்வதேசம் கொடுக்கும் பல்வேறு அழுத்தங்களுக்கு முக்கிய காரணம் புலம் பெயர் தமிழர்களின் ஒருமித்த போராட்டங்களும் செயற்பாடுகளுமே, அத்துடன் வீறுகொண்டு; தன்னம்பிக்கையுடன் போராடி சுதந்திர தமிழ் ஈழத்தினை பெற்று எம் தேசியத் தலைவரின் கைகளில் ஒப்படைக்க வேண்டும் எனவும் தாமரை கேட்டுக்கொண்டார்.
மாபெரும் தமிழ் எழுச்சியுடன் நடைபெற்ற கனேடிய தமிழ் வானொலியின் நட்சத்திரப் பெருவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இவ்விழாவில் தமிழின உணர்வாளர் தோழர் தியாகுவும் கலந்து கொண்டு எழுச்சியுரை ஆற்றியிருந்தார். பிரிடல் கஸ்ரோவும்.
சேருவேராவும் நடத்திய முதற் பேராட்டங்கள் தோல்வியிலேயே முடிவடைந்தன. ரஸ்யா நடத்திய போராட்டமும் முதலில் தோல்விகண்டது. இரண்டாவது போராட்டமே ரஸ்யாவிலும். கியூபாவிலும் வெற்றி கண்டது. எனவே முள்ளிவாய்கால் சம்பவத்தினை நினைத்து சோர்ந்து போகாது தமிழர்கள் தொடர்தும் தன்னம்பிக்கையுடனும் உறுதியுடன் போராட வேண்டும்.
அத்துடன் இன்றைய இளைஞர்கள் நடந்து முடிந்ததை நன்கு தெரிந்து உணர்ந்து கொள்ள வேண்டும் என தோழர் தியாகு கேட்டுக்கொண்டார். இவ்வாறாக எழுச்சியுடன் நடைபெற்ற நட்சத்திரப் பெருவிழாவில் சுமார் இருபதாயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் கலந்து கொண்டனர்.
பல்வேறு பாரம்பரிய விளையாட்டுக்களும் இடம்பெற்றிருந்தன. எழுச்சி மிக்கதாகவும் பல செய்திகளை எடுத்து வருவதாகவும் நாடகங்கள் நடைபெற்றன. தொடர்ச்சியாக பல்வேறு ஈழத்து எழுச்சிப் பாடல்களை தமிழ்நாட்டுப் பாடகர் ரி.எல் மகாராஜன் பாடினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக